சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்துவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமை, அங்கத்தவர்களாக உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு, கூட்டணியில் நீடிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து கலந்துரையாடி வருவதாக அறியமுடிகின்றது.
பெரும்பாலும் இது சம்பந்தமாக இன்று(திங்கட்கிழமை) முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு இன்று கூடுகின்றது.
வேட்புமனு தாக்கல் ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.