திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தனிப்பட்ட முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாக குறித்த சந்திப்பின் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள்.
விசேடமாக தற்போதைய காலகட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள மஞ்சள் தாக்கம் குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டதுடன், நெல் விலையானது எதிர்பாராத விதமாக வீழ்ச்சி அடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி இதன் காரணமாக விவசாய சமூகத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் போதிய எரிபொருள் கிடைக்க பொறாமை காரணமாகவும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிபருக்கும விவசாயத்தினைகள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியதாகவும் இதற்கான முடிவு இன்றைய கூட்டத்தில் வெட்டப்படவில்லை எனினும் இது தொடர்பில் மேலும் கவனம் செலுத்தி தங்களது பிரச்சனைக்குரிய தீர்வினை பெற்று தருவதற்கு இந்த அரசாங்கம் முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.