யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாணமாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை ஆறு கால் மடப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தவென மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடா மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
62 லீற்றர் கோடாவும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்த பொருட்களுடன் 65 வயதுடைய அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.