உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி நிலவுகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பலரும் முன்வந்துள்ளனர்.
இதனால் கடும் போட்டி நிலவுகின்றது. கடந்தமுறையைவிடவும் இம்முறை கேள்வி அதிகரித்துள்ளது. இது சிறந்த அறிகுறியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில சபைகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், அதில் தங்களது வேட்பாளர்களும் இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில சபைகளில் மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், அதில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களும் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
சில இடங்களில் இரு தரப்பினரும் தனிவழி செல்லவுள்ளதாகவும், தங்களுக்கிடையில் புரிந்துணர்வு இருக்கும் எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.