கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், “கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.
மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளன.
அந்த இரு நாடுகளுடனும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதென கூறமுடியும்.
விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும்.“ என அவர் தெரிவித்துள்ளார்.