இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெப்ரவரி 6ஆம் திகதி வேலைநிறுத்த நடவடிக்கை எடுப்பதில் செவிலியர்களுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இணையவுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த நான்கு புதிய வேலைநிறுத்த நடவடிக்கையில், ஒன்று செவிலியர்களின் வேலைநிறுத்த திகதியுடன் ஒத்துப்போகிறது.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் இருவரும் ஒரே நாளில் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
இந்த வாரம் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தங்களில் றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
தேசிய வெல்ஷ் சேவையுடன் 10 ஆங்கில ஆம்புலன்ஸ் சேவைகளில் ஏழு சேவைகளில் துணை மருத்துவர்கள், அழைப்பை கையாளுபவர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் வெளிநடப்புக்கள் பெப்ரவரி 6 மற்றும் 20 மற்றும் மார்ச் 6 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நடைபெறும்.