தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால், சுமார் 60 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்யோங் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நெருக்கமாக நிரம்பிய தற்காலிக வீடுகளின் பகுதியை தலைநகரின் கடைசி மீதமுள்ள சேரி என தென் கொரிய ஊடகங்கள் விபரித்துள்ளன.
ஐந்து மணிநேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு 900க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பல ஹெலிகொப்டர்கள் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீப்பிடித்ததற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் அப்பகுதி தீ மற்றும் வெள்ளத்திற்கு அடிக்கடி ஆளாகிறது.
பல வீடுகள் அட்டை மற்றும் மரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. கொரியா டைம்ஸின் கூற்றுப்படி, 2009 முதல் குர்யோங் கிராமம் குறைந்தது 16 தீ விபத்துகளை சந்தித்துள்ளது.