‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைத்தார்.
இரண்டாவது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) காணொளி மூலம் பிரதமரால் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் இருந்து ஜூனியர் பொறியாளர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை பிரதமர் வழங்கினார்.
இதன்பின்னர் பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டவர்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்களை பிரதமர் கேட்டறிந்தார்.
ரோஜ்கார் மேளா திட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதல் முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணை பிரதமரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.