அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் மற்றும் தெற்குப் பகுதியைத் தாக்கிய ஒரு பெரிய பனிப் புயலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்து வரையிலான முக்கிய வானிலை அமைப்பு ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.
இதனால் சாலைகளில் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பெருமளவிலான விமான இரத்துகள் மற்றும் மின் தடைகளும் ஏற்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (26) நடந்த செய்தியாளர் சந்திப்பில் டெக்சாஸில் புயல் தொடர்பான முதல் மரணத்தை ஆஸ்டின் மேயர் கிர்க் வாட்சன் அறிவித்தார்.
வாட்சன் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து உள்ளேயே இருக்கவும், உதவி தேவைப்பட்டால் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
லூசியானாவிலும் நியூயோர்க் நகரத்திலும் ஏனைய இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பட்டனர்.
விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அமெரிக்கா முழுவதும் 17,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையில், அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் திங்கட்கிழமை (26) வரை மூடப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு வலைத்தளமான PowerOutage.us தெரிவித்துள்ளது.
பனிக்கட்டிகள் மின் கம்பிகளில் படிந்து இருத்தல் மற்றும் மரக்கிளைகள் மின் கம்பிகளில் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மின் தடை அட்லாண்டிக் பெருங்கடலின் நடுப்பகுதி வரை விரிவடைந்தது.
டென்னசியில் 330,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.
மிசிசிப்பியில் 160,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், லூசியானாவில் 135,000 க்கும் மேற்பட்டவர்களும் மற்றும் டெக்சாஸில் 90,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் மின் தடையினை எதிர்கொண்டனர்.
மின் தடைகள் பல நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கின் அதிக மக்கள் தொகை கொண்ட இன்டர்ஸ்டேட்-95 நடைபாதையில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பாஸ்டன் உட்பட சில நகரங்கள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
அதே பரந்த புயல் அமைப்பு தென்கிழக்கில் சேதப்படுத்தும் பலத்த காற்று மற்றும் சூறாவளிகளையும் ஏற்படுத்தியது.












