தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் வடக்கு -கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், இருக்கும் அதிகார பகிர்வு விடயங்களை இடைக்கால தீர்வாக அமுல்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும் என்பதை தமிழ் அரசியல் தரப்புக்கு தெளிப்படுத்தினார்.
தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும் எனவும் அதில் இந்தியா தலையிட முடியாது எனவும் ஜெய்சங்கர் கூறினார்.
இதை தவிர அதிகார பகிர்வுக்கு எமது ஆதரவை முழுமையாக வழங்கத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.