கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று (23) பிற்பகல் தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டன
அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனால் கொழும்பு முதல் குறுக்குத் தெரு மற்றும் என்.எச்.எம். அப்துல் காதர் மாவத்தை முற்றாகத் தடைப்பட்டது.
போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,