நாளாந்தம் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு 2 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாலை 4 மணிக்குப் பின்னரே இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுலாகும் என குறிப்பிட்டார்.
பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுமென அமைச்சர் முன்னதாக உறுதியளித்திருந்தார்.
இருப்பினும் அதிக உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக நாளாந்த மின் தடையை தொடர வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பரீட்சையின் போது மின் தடை செய்ய வேண்டாம் என மின்சார சபைக்கு பரிந்துரைகளை வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.