கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
கொழும்பில் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் புத்தளத்தில் 625 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 4,090 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,
2022 ஆம் ஆண்டில் இலங்கையில் 66,376 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.