புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் முடங்கியதுடன், நோயாளிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் தட்டுப்பாடு உள்ள மருந்துகளை கொள்வனவு செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்ட போதும் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார்.
இந்தியக் கடன் வரியின் கீழ் முன்பதிவு செய்யப்படும் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் இன்னும் 15 நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று அவர் குறிப்பிட்டார்.
பற்றாக்குறையாக உள்ள எஞ்சிய மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.