தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இக்கடிதத்தில் கோரியுள்ளார்.
தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் தான் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து அரச அமைப்புகளின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டையும் அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு சில அரச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆதரவை, ஜனாதிபதி தலையிட்டு வழங்க வேண்டும் என நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.