இஸ்பஹான் நகரில் உள்ள இராணுவ தளம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் தாக்குதலை முறியடித்துள்ளதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு ஆளில்லா விமானம் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டது மற்றும் இரண்டு ஆளில்லா விமானங்கள் பாதுகாப்பு பொறிகளால் பிடிபட்டது. ஒரு கட்டடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டது என அமைச்சகம் மேலும் கூறியது.
இந்த தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் கூறுகையில்,
‘கோழைத்தனமான சம்பவம் நாட்டை சீர்குலைக்கும் முயற்சி. ஆனால், இந்த சம்பவம் ஈரானின் அமைதியான அணுசக்தி முன்னேற்றம் தொடர்பான உறுதியையும் நோக்கத்தையும் பாதிக்காது என்று அவர் கூறினார்.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பேட்ரிக் ரைடர், அமெரிக்க இராணுவம் இந்த தாக்குதல்களில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை’ என கூறினார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு ஆயுதங்களை வழங்குதல் ஆகியவற்றில் அதிக பதற்றங்களுக்கு மத்தியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.