உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோரியுள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல நாடுகளில் அதிகரித்து வரும் கடன் பாதிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள நிரமலா சீதாராமன், ஜி-20 நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் நிதிக் கூட்டத்தின் ஒரு கட்டமாக கடன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில், அமெரிக்க திறைசேரியின் பேச்சாளர் மற்றும் சீனாவின் நிதி அமைச்சு, அதன் மத்திய வங்கியின் அதிகாரிகள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள மறுத்துள்ளனர்.