இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மின் கட்டணமும் குறைக்கப்படும் எனவும் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் தனது அரசியலைப் பற்றி சிந்திக்காமல் மக்களைப் பற்றி சிந்தித்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாடெங்கிலும் வரிசையில் நிக்கும் நிலைமை மாற்றியமைக்கப்பட்டது என்றும் இரண்டு மாதங்களில் அந்த யுகத்தை மக்கள் கடந்திருந்தார்கள் என்றும் ருவன் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.