இலங்கையின் கடன் விவகாரத்திற்கு விரைவில் தீர்வை காணவேண்டும் என ஜி20 நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் முடிவில் இந்த வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிக்கையை வாசித்தார்.
இதில் நடுத்தர மற்றும் குறைந்த வருமான நாடுகளின் கடன் பலவீன தன்மைக்கு தீர்வை காணவேண்டியதன் அவசரத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் நிலவரத்திற்கு விரைவான தீர்வை காண்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டுள்ளார்.