உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெருவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் போர்கள் என பல நெருக்கடியான அனுபவத்தை கடந்தோம். இது உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
பல வருட முன்னேற்றத்திற்குப் பிறகு, நீடித்த வளர்ச்சியின் இலக்குகளைத் திரும்பப் பெறுவதில் நாம் பின்னோக்கி செல்லும் ஆபத்தில் இருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.