திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான சீன நன்கொடையின் கீழான இதய பூர்வமான உதவி எனும் தொனிப்பொருளின் கீழான டீசல் எரிபொருள் வழங்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) குச்சவெளி பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது
திருகோணமலை மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட 299,620 லீற்றர் டீசல் அளவில் நேற்று (வியாழக்கிழமை)
4290 லீற்றர் டீசல் விவசாயத்தேவைக்காக இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஒரு ஹெக்டயர் விவசாய நிலத்திற்கு 15 லீற்றர் எரிபொருள் எனும் விகிதத்தில் 34,640 பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர் கியுய் ஸென்ஹோன்ங் (Qi Zhenhong) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B.H.N ஜயவிக்ரம மற்றும் பல அரச அதிகாரிகள் பங்கேற்று பொது மக்களுக்கான எரிபொருளை பகிர்ந்தளித்தனர்.