ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.