உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
அதன்படி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர்ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், தேர்தலுக்கான பணத்தை ஒரேயடியாக வழங்குவதில் சிரமம் இருந்தால், பகுதி பகுதிகளாக வழங்க நிதியமைச்சுக்கு தெரிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகியுள்ளது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே மீண்டும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் வாக்களிப்பு திகதி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதற்கிடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது
இதேநேரம் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளது.