கிழக்கு நகரமான பாக்முட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய ஆய்வாளர்கள் வார இறுதியில், ரஷ்யப் படைகள் நகரத்தை நெருங்குவதால், உக்ரைன் அதன் சில துருப்புக்களை திரும்பப் பெறலாம் என எதிர்வு கூறியிருந்தனர்.
இந்தநிலையில் பல மாதங்களாக பாக்முட்;டை கைப்பற்ற முயற்சித்து வரும் ரஷ்யா, அப்பகுதியில் தற்போது வீதி துப்பாக்கி சூட்டு சண்டையில் ஈடுபட்டுவருவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் துணை மேயர் ஒலெக்சாண்டர் மார்ச்சென்கோ, வார இறுதியில் ரஷ்யா இன்னும் நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெறவில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், ரஷ்ய பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வாக்னர் தனியார் இராணுவத்தின் தலைவர், அவரது போராளிகளுக்கும் வழக்கமான ரஷ்யப் படைகளுக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு மத்தியில் வெடிமருந்து பற்றாக்குறை இருப்பதாக புகார் கூறினார்.
ரஷ்ய இராணுவ தலைமையகத்தில் இருந்து தனது பிரதிநிதி தடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.