ஓய்வூதிய வயதை 62இல் இருந்து 64ஆக உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரான்ஸ் போக்குவரத்து மற்றும் பொது சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலான ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன, மேலும் பல பாடசாலைகள் மூடப்படும்.
இது ஜனவரி நடுப்பகுதியில் இருந்து வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஆறாவது நாளாகும், மேலும் இது இன்னும் மிகப்பெரியதாக இருக்கும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
பரிஸ் மற்றும் பிற நகரங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
அரசாங்கம் அதன் ஓய்வூதியத் திட்டத்தில் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியும் காட்டாத நிலையில், ஒரு தொழிற்சங்கத் தலைவர், எதிர்வரும் நாட்களில், மின் உற்பத்தி மற்றும் எரிவாயு முனையங்கள் போன்ற முக்கிய துறைகளில் வேலை நிறுத்தத்தை நீடிக்க அழைப்பு விடுக்கப்படும் என கூறினார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், பொருளாதாரத்திற்கு சிறிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கிடையில் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தொடர்கிறது.