கச்சதீவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களுடை அத்துமீறல் தொடர்ந்தும் இடம்பெறுவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றினைந்து நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.