காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் சொத்தழிவுகளிலிருந்த காப்பாற்றுங்கள் என பிரமந்தனாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்குள் இரவு நுழைந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக குறித்த பகுதி விவசாயிகள் பெறுமதி மிக்க சொத்துக்களை இழப்பதுடன், பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.
நேற்று இரவு குறித்த பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் ஒருவரது காணியில் சுமார் 14 தென்னை மரங்களிற்கு மேல் சேதப்படுத்தி உணவாக்கிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து குறித்த காட்டு யானைகளை துரத்தியுள்ளனர். இதனால் மீண்டும் குறித்த காட்டு யானை திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் ஒருமாத காலத்திற்கு மேலாக காடடு யானைகள் கழாரமங்களிற்குள் புகுந்து அழிவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யானைகள் மக்கள் குடியிருப்புக்களிற்குள் நுழையாத வகையில் யானை வேலிகளை அமைத்த தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கினறனர்.