இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளதாகவும் இதன்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை சர்வாதிகாரத்தினை நோக்கி நகர்த்திச் செல்லும் அதேவேளை சர்வதேசத்தினை ஏமாற்றும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் பொறுப்புக்கூறலையே, இனப்பிரச்சினைக்கான தீர்வினையோ அவரிடத்திலிருந்து எதிர்பார்க்க முடியாது என்றும் இவை உட்பட ஏனைய மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.