இந்தியன்ஸ் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், டேனில் மெட்வேடவ், ஹென்ரி ரூபெல்வ், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், கோகோ கோஃப், பெட்ரா கிவிட்டோ, கரோலினா பிளிஸ்கோ ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், பெலராஸின் இல்யா இவாஷ்காவுடன் மோதினார்.
இப்போட்டியில் டேனில் மெட்வேடவ், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், பிரான்ஸின் ஹ்யூகோ ஹம்பர்ட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில் ஹென்ரி ரூபெல்வ், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
ஆண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், பின்லாந்தின் எமில் ருசுவூரியை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 7-5, 1-6, 7-5 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
பெண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கோஃப், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார்.
இப்போட்டியில், அமெரிக்காவின் கோகோ கோஃப், 6-4, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோ, லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன் மோதினார்.
இப்போட்டியில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோ, 0-6, 6-0, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோ, ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோ, 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.