உக்ரைனும் ரஷ்யாவும் பாக்முட் போர் தீவிரமடைந்து வருவதால் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதாக அறிவித்துள்ளன.
கிழக்கு உக்ரேனிய நகரத்தை பல மாதங்களாக கைப்பற்றும் நோக்கோடு மொஸ்கோ தொடர்ந்தும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகளை ரஷ்யப் படைகள் சந்தித்துள்ளது என்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 220க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினரை கொன்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள நான்கு பிராந்தியங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.