நிறைவேற்று அதிகாரத்தின் அழுத்தத்திலிருந்து நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புகளை முறையாகப் புறக்கணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
நிர்வாகிகள் நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியத் தயாராக இல்லை என்பதையும், தீர்ப்புகளை முறையாகப் புறக்கணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே நீதிபதிகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குவம் நிறைவேற்று அதிகாரத்தை அனுமதிக்கக் கூடாது என சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு நாடாளுமன்றத்தை பயன்படுத்துவது ஆரோக்கியமற்ற செயற்பாடு எனவும் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.