ஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாரத்தில் திட்டமிடப்பட்ட மூன்று வெளிநடப்புகளில் இது முதலாவதாகும்.
பிரித்தானியா முழுவதிலும் உள்ள 150 பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஒன்றியத்தின் சுமார் 70,000 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பணிக்கு வராதவர்களில் விரிவுரையாளர்களும் அடங்குவர்.
எதிர்வரும் இன்று மற்றும் புதன் கிழமைகளிலும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.