தனது நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை சவால் செய்ததற்காக அவரது பாதுகாப்பு அமைச்சரை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பதவி நீக்கம் செய்துள்ளார்.
இதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான போராட்டக்கார்கள் இஸ்ரேல் முழுவதும் உள்ள நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெதன்யாகுவின் வீட்டிற்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் நீர் தரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மக்களின் ஒற்றுமைக்காக சீர்திருத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறை மறுசீரமைப்பை இடைநிறுத்த முடிவு செய்தால் கட்சி அவருக்கு ஆதரவளிக்கும் என கலாச்சார அமைச்சர் மிக்கி சோஹர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள தலைவர்கள் இன்று திங்கட்கிழமை காலை சந்திக்க உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேநேரம் அபிவிருத்திகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாகவும், சமரசத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.