நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் பொது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2023 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் வலியறுத்தியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பல அதிகாரங்களில் பொது நிதி தொடர்பான அதிகாரங்கள் மிக முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவாறானதொரு நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியை அவர் விடுவிக்க மறுத்தால், அது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.