எரிபொருள் விலை குறைப்பின் ஊடாக மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் முன்மொழிவு ஒன்றை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை, உலக சந்தையில் நிலக்கரியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளமை போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலையை குறைப்பதன் மூலம் மின்சார கட்டணத்தை சுமார் இருபது வீதத்தால் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.