தமது முன்னாள் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சாலிய பீரிஸூக்கு எதிராக கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து, சாலிய பீரிஸின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் கடமைகள் தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பொதுமகனுக்கும் நியாயமான விசாரணைக்கு உரிமை உண்டு எனவும் தாம் விரும்பும் ஒரு சட்டத்தரணியினால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையும் உள்ளது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
போதைவஸ்து கடத்தல்காரரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்கிரமரத்ன சார்பில் சாலிய பீரிஸ் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என்று கோரியே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.