2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பண வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரை தனியாள் முற்பண வருமான வரியில் 25,577 மில்லியன் வசூலித்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியனும், பெப்ரவரியில் 10,540 மில்லியனும், மார்ச் மாதத்தில் 11,931 மில்லியனும் வரியாக வசூலித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.