இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
டுனீடின் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இதனால் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி சனிக்கிழமை இடம்பெறும்.