பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படும் அதேநேரம் அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்களை கடும் அடக்குமுறைக்கு தள்ளிவிடுவதற்கு ஜனாதிபதிக்கு இச்சட்டமூலம் அதிகாரம் வழங்கும் என்பதனால் அதனை தோற்கடிக்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இச்சட்டமூலத்தினால் போராட்டத்தில் ஈடுபடும் சாதாரண விவசாயி முதல் ஊடகவியலாளர்கள் வரை கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு விராேதமான கருத்துக்களை தெரிவித்தால் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.
ஆகவே ஜனநாயக உரிமைக்கு விரோதமாக அமைந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிச்சியமாக தோற்கடித்தே ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.