தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது.
தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலொன்றை கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பிரதமருக்கு அண்மையில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமையவே நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவது கடினமானது என குறித்த கலந்துரையாடலின் பின்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்கான திகதியை 25ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என இராஜாங்க அமைச்சர் இதன்போது கூறியிருந்தார்.