இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பௌத்த மத இருதரப்பு பிணைணப்புக்களின் வரலாறு நெடியது. தற்போதும் நீடித்துக்கொண்டிருப்பது.
பௌத்த மதமானது, இந்தியாவில் 7 ஆம் நூற்றாண்டில் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது.
ஆனால் 12ஆம் நூற்றாண்டில் பாலப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடக்கு இமயமலைப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மறைந்துவிட்டன.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் பௌத்த மதத்தின் மறுமலர்ச்சியைக் கண்டது. இலங்கையின் முன்னோடியான அநகரிகா தர்மபாலா பிரிட்டிஷ் அறிஞர்களின் உதவியுடன் மகா போதி சங்கத்தை நிறுவினார்.
அவர்களின் முக்கிய நோக்கம் இந்தியாவில் பௌத்த யாத்திரைத் தளங்களை மீட்டெடுப்பதாக இருந்தது.
மேலும் அவர்கள் அனைத்து பௌத்த தளங்களிலும் கோயில்களைக் கட்டுவதில் மிகவும் வெற்றி கண்டனர். இப்போது அக்கோவில்களில் துறவிகள் உள்ளனர்.
1950இல், புதிய – பௌத்த இயக்கத்தை தீண்டத்தகாத சாதியினருக்காக அம்பேத்கர் தொடங்கினார். சாதி பாகுபாடுகளைத் தவிர்ப்பதற்காக நூறாயிரக்கணக்கானோர் பௌத்தத்திற்கு மாறினர்.
கடந்த தசாப்தத்தில் கூட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் பௌத்தத்திற்கு மாறுவதற்கான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. தற்போது, இந்திய மக்கள்தொகையில் 2சதவீதமான பௌத்தர்கள் உள்ளனர்.
3ஆம் நூற்றாண்டில் இந்தியப் பேரரசர் அசோகாவின் மகன் மகேந்திராவால் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இலங்கை பௌத்த கற்றல் மையமாக இருந்து வருகிறது. பௌத்தத்தின் மிக நீண்ட தொடர்ச்சியான வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அறிஞர்கள் மற்றும் பிரம்மஞானிகளின் உதவியுடன் பௌத்தம் ஒரு வலுவான மறுமலர்ச்சியை கண்டது, அறிவார்ந்த படிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, சாதாரண சமூகத்திற்கான துறவிகளின் ஆயர் நடவடிக்கைகள், மற்றும் சாதாரண மக்களுக்கு தியான நடைமுறைகளுடன் கூடிய பௌத்தத்தை சில சமயங்களில் இலங்கை ‘புரட்சி பௌத்தம்’என்று வகைப்படுத்துகிறது.
1948 இல் நாடு சுதந்திரம் பெற்றது, அதன் பின்னர் பௌத்த மதம் மற்றும் கலாச்சாரம் மீதான ஆர்வத்தில் வலுவான மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது, 70 சதவீதமான இலங்கையினர் பௌத்தர்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் தேரவாத பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். இலங்கையில் தற்போது தேசிய அளவில் பௌத்தம் எழுச்சியை நோக்கி நகர்த்தப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், பௌத்த மதத்தின் புராதன மற்றும் தனித்துவத்தினை பேணிப்பாதுகாப்பதற்கான செயற்பாடுகளுக்கு இந்தியா வழங்கும் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, புதுடில்லி பௌத்தம் மத பாரம்பரியத்தை மீண்டும் உற்சாகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இது சீனாவுக்கு தலையிடியாக மாறியுள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, பௌத்தம் உள்நாட்டு அதிருப்தியைத் தணிப்பதற்கும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அபாயங்களைத் தடுப்பதற்கும் ஒரு முக்கிய வழிமுறையாகவே கருதுகின்றது.
இதனால், சீனா பௌத்தம் ஒரு ‘பண்டைய சீன மதம்’ என்று விவரிக்கத் தொடங்கியுள்ளதோடு, சீனக் குடிமக்கள் நடைமுறையில் சுதந்திரத்தினை முழுமையாக உணராதபோதும் பௌதத்தினை தீவிரமாக வெளிப்படுத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாடானது, உள்நாட்டு சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதிலும், திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் திபெத்தியப் பகுதிகளில் பௌத்த சமயத்தினை மேம்படுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சக்தி வாய்ந்த பௌத்தர்களை அணுகுவதன் மூலம் அருகிலுள்ள பிராந்தியங்களில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் பௌத்தத்தைப் பிரதான பொருளாக கருதுர்கின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலைமையானது, இலங்கையிலும அண்மைய காலங்களில் மெல்லக் காலூன்றுவதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது தனது ராஜதந்திர நகர்வுகளுக்காகவும் பௌத்தினை பயபடுத்த ஆரம்பித்துள்ளது சீனா.
ஆனால், தனது உள்நாட்டில் பௌதத்தினையோ, பிக்குகளையோ பிரத்தியேகமாக செயற்படுவதற்கான எந்தவிதமான அனுமதிகளையும் வழங்கவில்லை என்பது தான் துரதிஷ்வசமானது.
தன்னை அதியுச்ச கம்னியூச சித்தாந்த நாடாக உலகிற்கு சித்தரிக்கும் சீனா, பௌத்த சமயத்தைப் பயன்படுத்தி தனது இராஜதந்திரத்தினையும், அதிகார விஸ்தரிப்பையுமே முன்னெடுக்க முயல்கின்றது.
இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது திபெத் பிரதேசத்தினை கையகப்படுத்த முனைவது, ஜனநாயகமற்ற மியன்மாருக்கு ஊக்குவிப்பு வழங்குவது, போன்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்ட முடியும்.
ஆகவே, பௌத்த வரலாறு, மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு அப்பால் சீனா தன்னலத்தினையே அடிப்படையாக் கொண்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாக உள்ளது.