சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் எல்லையாக 2.9 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி அளித்திருக்கின்றது. இந்த அனுமதி கிடைப்பது காலதாமதமாகியமைக்கு சீனாவின் உத்தரவாத கடிதம் தமதமாகியமை தான் காரணமாகின்றது.
போரின் பின்னரான சூழலில் இலங்கைக்கு நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பாரிய நிர்மாணங்கள் என்று எண்ணற்ற வகையில் சீனா பல்வேறு விதமான கடன்களை அள்ளி வழங்கியுள்ளது.
இந்த கடன்களை மீளச் செலுத்துவதற்கு இயலாத நிலைமையை இலங்கையின் பொருளாதார நிலைமைகள் ஏற்படுத்தியுள்ள நிலையில் தான் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு இலங்கை தீர்மானித்தது.
ஏனினம், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் சீனாவின் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவாதக் கடிதம் இழுத்தடிக்கப்பட்டமை தான்.
இவ்வாறான நிலையில் தற்போது இம்மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் கடன்மறுசீரமைப்பு செயன்முறையை வெளியிடுவதற்கு முயற்சிக்கின்றபோதும், சீனாவின் பக்கத்திலிருந்து இன்னமும் உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
இவ்வாறான நிலைமையில் தான் எதிர்வரும் மாத நடுப்பகுதியில் சீனாவின் யுனான் பிராந்தியத்துக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் யுனான் மாகாணத்தின் ஆளுநர் வாங் கலந்துகொள்ளவுள்வதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
இந்த இடத்தில் மிகமுக்கியமான விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
ஏற்கனவே, துறைமுகம், விமானநிலையில் இதரன பாரிய நிர்மாணங்களுக்கு சீனா தனாகவே முன்வந்து முதற்கட்ட நிதியை நன்கொடையாகவும் ஏனையவற்றை உயர் வட்டியுடன் கடனாகவும் வழங்கியமை வரலாறாக பதிவாகியுள்ளது.
இவ்வாறாக உள்நாட்டில் நெருக்கடியான நிலைமைகள் உருவெடுப்பதற்கு சீனா வழங்கிய கடன் தான் பிரதான காரணமாக இருக்கின்றது. ஆனால், தாற்போது சற்று வித்தியாகசமாக சிந்திக்க ஆரம்பித்துள்ளது.
அதாவது, சீனாவின் யுனான் மாகாணம் தெற்காசிய வலயத்தினை அண்தித்தவொரு பூமியாகும். இந்த மாகாணத்திலிருந்து பாகிஸ்தானுக்கு வீதியும் அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த மாகாணத்தை தெற்காசிய வலங்களுடன் மிகநெருக்கமாகச் செயற்படுவதற்கான மூலோபாயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடிப்படைக்காரணம், தெற்காசிய வலய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் கட்டமைப்பு வலுவிழந்துள்ள நிலையில் யுனானை மையப்படுத்திய தெற்காசிய புதிய கட்டமைப்பொன்றை உருவாக்குவதாகும்.
இந்த மூலோபாயத்தின் அடிப்படையில் தான் சீனாவின் யுனான் பிராந்தியமானது, இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளுடன் ஒட்டி உறவாடுவதற்கு முனைப்புச் செய்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக, இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏற்கனவே பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளபோதும், அவை அனைத்துமே மத்திய அரசாங்கத்தினை அடியொற்றியதாக இருக்கின்றன.
ஆகவே, அந்த ஒப்பந்தங்கள் தொடர்பிலான விமர்சனங்களும் அதிகமாக உள்ளன. அவ்வாறான நிலையில் தனது மூலோபாயத்துக்கு அமைவாக யுனான் மாகாணத்தை இலங்கை போன்ற சிறிய நாடுகளுடன் ஐக்கியப்படுத்துவதன் ஊடாக புதிய ஒப்பந்தங்களைச் செய்ய முடியும் என்று சீனா எதிர்பார்க்கின்றது. குறித்த ஒப்பந்தகள் ஊடாக ஆதிக்க அகலக்காலை விரிவு படுத்த முடியும் என்றும் சீனா கருதுகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டே, இலங்கைக்கான சீனாவின் தூதுவர் தலைமையிலான குழுவின் வழிநடத்தலுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி சார்ந்த அடுத்த அத்தியாயமாக சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்து செயற்படுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் யுனான் மாகாண பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, பிராந்திய அபிவிருத்தியை மையமாகக்கொண்டு யுனான் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதனால் கல்விசார் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றங்கள், இணைந்த ஆராய்ச்சிகள் ஏனைய சமூக பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் உடன்படிக்கையின் மூலம் செயற்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீனாவின் ஒரு மாகாணத்தின் முழுமையான வள பங்கீட்டுடன் நடைபெறவுள்ள இவ் வேலைத்திட்டங்களில் புதிய தொழில்நுட்ப யுக்திகள், விவசாய வர்த்தகம் சார் புத்தாக்க நடவடிக்கைகள் என்பன முன்னிலை வகிக்கின்றன என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆனால், அத்தனை விடயங்களையும் சீனா தன்னுடைய நலன்கள் எவையுமின்றி முன்னெடுக்குமா என்பதை ஒருதடவை விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.
அண்மையில், பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றிய சீன பிரஜைகள் 39 பேர் அடங்கிய குழுவொன்று அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்து இந்த இணைய மோசடிகளில் ஈடுபட்டு பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆகவே, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் இவ்விதமான சட்டவிரோத தரப்புக்கள் நேரடியாக கிழக்கு மாகாணத்திற்குள் பிரவேசித்து தங்கியிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் எவ்வாறு செல்லும் என்பது பெருங்கேள்வியாகிவிடும்.
அதுமட்டுமன்றி, சாதாரணமாக சீனா தான் கடன் வழங்கிய நிர்ணமானங்களிலேயே சீன மொழிப்பிரயோகத்தினை வலிந்து உட்புகுத்தும் நிலையில், பாரம்பரியங்கள் மிக்க கிழக்கு பல்கலைக்கழகத்தில் சீன மொழி உட்புகுத்தப்பட மாட்டாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லை.
அவ்விதமான நிலையில் கற்றிந்த சமூகத்தினைக்கொண்டிருக்கும் கிழக்கு பல்கலைக்கழகம் சீனாவின் யுனான் மாகணத்துடனான ஒப்பந்த்தினை மீளாய்வு செய்வது தான் புத்திசாதூரியமானதாக இருக்கும்.