ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பில் நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அது தொடர்பில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தெரிவிக்கையில், ‘இந்தியா 4 ஆண்டு காலத்திற்கான ஐ.நா.வின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பிற்கு 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
போட்டித்தேர்தலில் மிகவும் வலுவாக வெற்றி பெற்றதற்காக நியூயோர் ஐ.நா. அமைப்பில் உள்ள இந்திய பணிக்குழாத்துக்கு வாழ்த்துகள்.
புள்ளிவிவரங்கள், பன்முகத்தன்மை மற்றும் மக்கள்தொகைத் துறையில் இந்தியாவின் நிபுணத்துவம் ஐ.நா புள்ளியியல் ஆணையத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐ.நா.வின் உயர்ந்த புள்ளியியல் அமைப்பில தேர்தலில் 53 வாக்குகளில் 46 வாக்குகளைப் பெற்று, போட்டியாளர்களான சீனா உள்ளிட்ட நாடுகளை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்தியா முன்வந்துள்ளது. சுருக்கமாக, பார்க்கையில் இது இந்தியாவுக்கு வெற்றியாகும்.
1947 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையம், உலகெங்கிலும் உள்ள உறுப்பு நாடுகளின் தலைமை புள்ளியியல் நிபுணர்களை ஒன்றிணைக்கும் உலகளாவிய புள்ளிவிவர அமைப்பின் மிக உயர்ந்த அமைப்பாகும்.
இது சர்வதேச புள்ளியியல் நடவடிக்கைகளுக்கான மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும், புள்ளியியல் தரநிலைகளை அமைப்பதற்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவற்றை செயல்படுத்துவது உட்பட கருத்துக்கள் மற்றும் முறைகளின் வளர்ச்சிக்கும் பொறுப்பாகும் என்பத குறிப்பிடத்தக்கது.