வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் அடிப்படையில் இலத்திரனியல் கொள்வனவு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதலாம் திகதி முதல் 300 மில்லியனுக்கும் அதிகமான கொள்முதல் அறிவிப்புகள் இலத்திரனியல் மூலம் அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
200 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்களின் விவரங்கள் வரி அமைச்சினால் சேகரிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் நியமிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கப்படும்.
அடுத்த மாதம் முதல் அமைச்சரவை அளவிலான கொள்முதல் குழுக்களின் நியமனம் இந்த அறிவுறுத்தல்களை நிறைவேற்றிய பின்னரே மேற்கொள்ளப்படும் என பொது நிதிப் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக இலங்கை தனது இ-ஜிபி முறையை பல வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.
இருப்பினும் பெரும்பாலான அரச முகவர் நிலையங்கள் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
வருவாய் நிர்வாகம் மற்றும் கொள்முதல் போன்ற துறைகளில் டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதன் மூலம் ஊழலுக்கான வாய்ப்புகளை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.