முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யவோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசாரணைக்காக ஆஜராகவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத தடுப்புப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மூன்றாவது தடவையாக அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்றும் ஆஜராகவில்லை.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புவல் டி லிவேரா இன்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வருகை தரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதா 2021 மே 17 அன்று ஊடக சந்திப்பில் பேசிய, தப்புல டி லிவேரா, 2019 ஏப்ரல் தாக்குதல்கள் பின்னணியில் பெரும் சதி உள்ளது என கூறியுள்ளார்.
நேரங்கள், இலக்குகள், இடங்கள், தாக்குதல் முறை மற்றும் பிற தகவல்களுடன் அரச புலனாய்வு சேவையின் தகவல்கள் ஒரு பெரிய சதித்திட்டம் இருந்ததற்கான தெளிவான சான்றுகள் என கூறியிருந்தார்.