ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பொதுச்சபை கூட்டம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
கட்சியின் தவிசாளராக இருந்த பீரிசுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. உரிய நடைமுறைகளை பின்பற்றியே கூட்டம் நடத்தப்பட்டது.“ எனத் தெரிவித்துள்ளார்.