பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் என்ற வீட்டுத்திட்டம் பல ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்கள் நிரந்தரமான வீடுகளைப் பெறுவதற்கு உதவுகின்றது.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், ஏராளமான ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூஎய குடும்பங்களை மையப்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த மக்கள் முன்னர் ஒரு அறை கொண்ட தற்காலிக குடில்கள் அல்லது இருண்ட மற்றும் சேற்று நிலங்களில் அமைந்துள்ள வசதிகள் குறைந்த வீடுகளில் வசித்து வந்தனர்,
இந்த நிலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு மொத்தம் 39 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாக குப்வாவா, மேம்பாட்டு உதவி ஆணையர் ஹிலால் அஹ்மத் தெரிவித்தார்.
‘திட்டத்தின் கீழ், மொத்தம் 8000பேர் அடையாளம் காணப்பட்டனர். அதில் கடந்த நிதியாண்டில் எங்களுக்கு 3426வீடுகள் ஒதுக்கப்பட்டன.
நாங்கள் அனைத்து 3426 வீடுகளுக்கும் முதல் தவணையைச் செலுத்தியுள்ளோம், முதல் தவணையின் கீழ் மொத்தம் 17 கோடி ரூபாவும், இரண்டாவது தவணையாக 15 கோடி ரூபாவும், மூன்றாம் தவணையாக சுமார் 7 கோடிரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு வரும் அடுத்த ஒதுக்கீட்டில், இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்கு முயற்சிப்போம்’ என்றார்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஏழ்மையான மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் முயற்சிகளை பயனாளிகள் பாராட்டியுள்ளனர்.
லால் தின் கட்டனா என்ற பயனாளி கூறுகையில், ‘இந்த திட்டத்தின் கீழ் நாங்கள் சுமார் 1.75இலட்சம் பெற்றுள்ளோம். அடுத்த 5-6 நாட்களில், நாங்கள் எங்கள் புதிய வீட்டிற்குள் நுழைவோம்.
அரசாங்கத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மோடிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.