டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி குறைவடையும் போது பொருட்களின் விலைகளும் நியாயமான முறையில் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் வர்த்தக கொள்கைத் துறை, மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு என்பன ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.