ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஜீ-7 மாநாட்டின் உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் இன்று மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.
ஜீ-7 என்பது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
இந்த முறை, இந்த மாநாட்டிற்கு பல நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர், அதன்படி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் பங்கேற்றார்.