தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகக்கான நிரந்தர தீர்வு, உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியன தொடர்பாக்கவும் இந்த மாநாட்டின் பொது தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டிக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், சீ.வி.கே.சிவஞானமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டமும் வருடாந்த மாநாடு மற்றும் கட்சிக்குள் தலைமைத்துவத்திற்கான போட்டிகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின் வட்டாரக்கிளைகள் தெரிவு செய்யும் செயற்பாடுகள், யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையடையாத காரணத்தினால் குறித்த பணிகள் பூர்த்தி செய்த பின்னர், கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிநிலைகளுக்கான விண்ணப்பங்களை கோரப்படும் என குறிப்பிட்டுள்ளார். (நன்றி கேசரி)